News March 7, 2025
மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு

நங்கவள்ளி அருகே சாணாரப்பட்டி ஊராட்சி கூலிக்காட்டை சேர்ந்தவர் பழனி. இவர் 8 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகில் 8 ஆடுகளையும் கட்டி வைத்து இருந்தார். அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு பழனி எழுந்து வந்து பார்த்தார். அப்போது மர்ம விலங்கு கடித்து குதறியதில் 3 ஆடுகள் செத்து கிடந்தன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
சேலத்தில் லிப்ட் கேட்டு வந்த பெண் பலி

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நடந்த சாலை விபத்தில் கடலூரைச் சேர்ந்த சாந்தி (50) என்ற பெண் உயிரிழந்தார். சிறுவாச்சூரிலிருந்து தலைவாசல் நோக்கி ‘லிப்ட்’ கேட்டு பைக்கில் சென்றபோது, பட்டுத்துறை அருகே கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதன் பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 13, 2025
இதுவும் சேலத்தின் சிறப்புதாங்க!

சேலம் மாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், காலையில் அவசர அவசரமாக வேலைக்குச் செல்வோர், ஆரோக்கியமாகவும் சாப்பிட விரும்புவோர் எனப் பலருக்கும் அவல் சுண்டல் ஒரு வரப்பிரசாதமான உணவாக உள்ளது.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வெறும் 10 ரூபாயில் உங்கள் காலை உணவை முடித்திவிடலாம். சேலம் என்றால் மாம்பழம்,தட்டுவடை செட் மட்டும் அல்லாது அவல் சுண்டலும் போமஸ்தான் என்றால் மிகையாகது.SHARE
News September 13, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.