News March 7, 2025

இபிஎஸ்ஸின் முன்னாள் செக்யூரிட்டிக்கு சம்மன்

image

கோடநாடு கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி இபிஎஸ்ஸின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த CM ஜெயலலிதாவுக்கும் பாதுகாப்பு அதிகாரியாக வீரபெருமாள் பணியாற்றினார். கோடநாடு வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட கனகராஜ் உயிரிழப்பு குறித்த விசாரணைக்கு 11ஆம் தேதி ஆஜராகும்படி சிபிசிஐடியால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இபிஎஸ்க்கு இது புதிய நெருக்கடியாக கூறப்படுகிறது.

Similar News

News March 9, 2025

நான் அதை செய்தால் உக்ரைன் காலி: எலான் மஸ்க்

image

வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது மீண்டும் மஸ்க், ஜெலன்ஸ்கியை வம்புக்கு இழுப்பது போல் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்,எனது ஸ்டார்லிங்க் இன்டர்நெட்தான் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளது. அதை ஆப் செய்தால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் காலியாகிவிடும் என பதிவிட்டுள்ளார்.

News March 9, 2025

சனி கவனிக்க போகும் 3 ராசிகள்!

image

சனி பகவான் ஏப்ரல் 28ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது, பல ராசிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தினாலும், ரிஷபம், சிம்மம், மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நன்மையை அள்ளிக் கொடுக்க போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

News March 9, 2025

எஸ்கேப் ஆயிட்டான் NZ

image

இந்தாண்டில் இதுவரை இந்திய அணி 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், இன்றைய போட்டி தவிர அனைத்திலுமே எதிரணியை ஆல்-அவுட் செய்து இந்திய அணி சாதனை நிகழ்த்தியுள்ளது. பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப், அக்‌ஷர், ஜடேஜா போன்ற பலம் வாய்ந்த பவுலர்களால் இது சாத்தியப்பட்டது. ஆனால், NZக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா ஆல்-அவுட் செய்யத் தவறிவிட்டது. NZ 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!