News March 7, 2025

தென்காசி குரூப் 1 மாணவர்களுக்கு GOOD NEWS

image

தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் TNPSC குரூப்-1 கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04633 213 179 -ல் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.*TNPSC மாணவர்களுக்கு பகிரவும்*

Similar News

News July 7, 2025

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் – ஆட்சியர்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் ஜுலை 2025 மாதம், இரண்டாவது செவ்வாய்கிழமை நாளை (08.07.2025) தென்காசி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. குறைகேட்பு முகாமிலும் ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

News July 7, 2025

சங்கரன்கோவில் அருகே வாகனம் மோதி பெண் பலி

image

தென்காசி முதலியார் தெருவை சேர்ந்தவர் குருநாதன் (60). இவரது மனைவி தும்பி அம்பாள் (55). சங்கரன் கோவில் – நெல்லை சாலையில் நவ நீதகிருஷ்ணாபுரம் விலக்கு அருகே தும்பி அம்பாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் தும்பியம்மாள் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 7, 2025

தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

image

தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 70 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 36 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 69 அடி. கருப்பாநதி அணை நீர் இருப்பு 65 அடி. குண்டாறு அணை நீர் இருப்பு 36 அடி. இந்த அணைக்கு வரும் 18 கான அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 127 அடியாக உள்ளது.

error: Content is protected !!