News March 7, 2025

சினிமாவில் வார்னரின் சம்பளம் எவ்வளவு?

image

கிரிக்கெட் வீரர் வார்னர் ‘ராபின் ஹூட்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிக்க அவர் சம்பளம் எதுவும் கேட்கவில்லையாம். ஆனால், தயாரிப்பாளர் தான் அவருக்கு ₹50 லட்சம் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி குடுமலா இயக்கியுள்ள இப்படத்தில் நிதின், ஸ்ரீலீலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி இசையமைத்துள்ளார்.

Similar News

News March 9, 2025

புது மனைவியை பழி வாங்கிய கணவன்.. அடப்பாவி

image

கடலூரில் திருமணமான 26வது நாளில் கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கலந்து கொடுக்கவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் இன்று உயிரிழந்தார். இந்நிலையில், கலையரசன் மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கிய ரசீது, சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், மனைவியை பழிவாங்கவதற்காக அவர் இதுபோன்று பொய் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

News March 9, 2025

அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல்

image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்ட சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது அங்குள்ள இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உள்ளூர் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தியுள்ளார்.

News March 9, 2025

CT FINAL: கேட்ச் பிடிப்பதில் கோட்டைவிடும் இந்திய வீரர்கள்

image

CT ஃபைனலில் இந்தியா சிறப்பாக பந்துவீசி வருகிறது. ஆனால், ஃபீல்டிங்கில் நம் வீரர்கள் சொதப்புகின்றனர். மொத்தமாக 4 கேட்சுகளை தவறவிட்டுள்ளனர். 7, 8வது ஓவர்களில் ரச்சின் கொடுத்த வாய்ப்பை ஷமி, ஸ்ரேயாஸ் மிஸ் செய்தனர். 35வது ஓவரில் மிட்செல் கேட்சை ரோகித் தவறவிட்டார். அடுத்த ஓவரிலேயே பிலிப்ஸ் கொடுத்த கடினமான கேட்சை கில் விட்டுவிட்டார். ஃபைனலில் இந்திய வீரர்கள் கேட்ச் விடுவது பற்றி உங்கள் கருத்து?

error: Content is protected !!