News March 7, 2025
ALERT: ஃபேஸ்புக் யூஸ் பண்றீங்களா?

சர்க்கரை நோய்க்கு எலான் மஸ்க் மருந்து கண்டுபிடித்துள்ளதாக AIஆல் எடிட் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பரவி வருகின்றன. இதனால் மருந்தக நிறுவனங்கள், எலான் மஸ்க் தலைக்கு $78 மில்லியன் விலை வைத்துள்ளதாக கூறி, பயனர்களை Gluco Revive உள்ளிட்ட அதிகாரப்பூர்வமற்ற மருந்துகளை வாங்க தூண்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளது.
Similar News
News March 9, 2025
பிரசாந்த் கிஷோர் கட்சிக்கே மதிப்பில்லை: துரைவைகோ

தவெக கட்சி குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து சரியானது அல்ல என மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார். தவெக ஆண்டு விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், தேர்தலில் விஜய் கட்சி வெற்றி வாகை சூடும் என கூறியிருந்தார். இது குறித்து பேசிய துரைவைகோ, பணம் கொடுக்கும் கட்சிக்காக பணியாற்றுபவர் என பி.கே.வை விமர்சித்துள்ளார். தவிர, பீஹாரில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
News March 9, 2025
திருப்பதியில் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள குடூர் ரயில் நிலையம் அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்ற போது, இளைஞர் ஒருவர் சிகப்புத் துணியை காண்பித்து ரயிலை நிறுத்தினார். ஓட்டுநர் இறங்கி வந்து பார்த்த போது அங்கு ரயில் தண்டவாளம் உடைக்கப்பட்டிருந்தது. இளைஞரின் துரித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். மேலும், இது சதிச்செயலா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
News March 9, 2025
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாற்றம்?

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ₹1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வருமான வரி செலுத்துவோர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளோர், சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோர், அரசு ஊழியர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.