News March 7, 2025
நாளை கெடு.. மணிப்பூரில் அமைதி திரும்புமா?

மணிப்பூரில் நாளை முதல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மலைப் பகுதி மக்களுக்கு தனி நிர்வாகம் அல்லது யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என பழங்குடி அமைப்புகள் போர் கொடி தூக்கியுள்ளன. இதற்கு மெய்தி அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மலைப்பகுதியை நோக்கிய பேரணியை அறிவித்துள்ளதால், பதற்றம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
Similar News
News March 9, 2025
முகூர்த்த நாள்.. பத்திரப்பதிவு செய்ய கூடுதல் டோக்கன்

மாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாளான நாளை, பத்திரப்பதிவு மேற்கொள்ள மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இதன் காரணமாக அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, 100 டோக்கன் வழங்கப்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்களும், 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
News March 9, 2025
பிரசாந்த் கிஷோர் கட்சிக்கே மதிப்பில்லை: துரைவைகோ

தவெக கட்சி குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து சரியானது அல்ல என மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார். தவெக ஆண்டு விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், தேர்தலில் விஜய் கட்சி வெற்றி வாகை சூடும் என கூறியிருந்தார். இது குறித்து பேசிய துரைவைகோ, பணம் கொடுக்கும் கட்சிக்காக பணியாற்றுபவர் என பி.கே.வை விமர்சித்துள்ளார். தவிர, பீஹாரில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
News March 9, 2025
திருப்பதியில் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள குடூர் ரயில் நிலையம் அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்ற போது, இளைஞர் ஒருவர் சிகப்புத் துணியை காண்பித்து ரயிலை நிறுத்தினார். ஓட்டுநர் இறங்கி வந்து பார்த்த போது அங்கு ரயில் தண்டவாளம் உடைக்கப்பட்டிருந்தது. இளைஞரின் துரித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். மேலும், இது சதிச்செயலா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.