News March 7, 2025
CT FINAL: நடுவர்கள் அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, AUSஐ சேர்ந்த பால் ரெஃபில் மற்றும் ENGஐ சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாக இருப்பர். இலங்கைச் சேர்ந்த ரஞ்சன் மதுகல்லே போட்டி நடுவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3rd Umpire ஆக ஜோயல் வில்சனும், 4th Umpire ஆக குமார் தர்மசேனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 9, 2025
CT இறுதிப் போட்டி: எந்த சேனலில் ஒளிபரப்பு?

இந்தியா – நியூசிலாந்து இடையே நடக்கும் இன்றைய பைனல் போட்டியை மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் app மூலம் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். அதே போல், டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் போட்டியை ரசிக்கலாம். இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை இந்தியா கையில் ஏந்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
News March 9, 2025
கத்திய மஸ்க்; வேடிக்கைப் பார்த்த டிரம்ப்!

அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தின்போது வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் எலான் மஸ்க் வாக்குவாதம் செய்துள்ளார். அதனை அதிபர் டிரம்ப் வேடிக்கை பார்த்து மெளனமாக இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ஒன்றுமே நடக்கவில்லை என கோபத்துடன் அவர் கூறியதும் பேசுபொருளாகியுள்ளது. பணி நீக்கம் தொடர்பாக மஸ்க்குக்கும், ரூபியோவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
News March 9, 2025
சிக்கன் விலை தெரியுமா?

நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் கூடிய கறிக்கோழி விலை 1 கிலோவுக்கு ரூ.107ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ கோழிக்கறி ரூ.175 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதேபோல், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.80ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகரங்களில் முட்டை ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.