News March 7, 2025
போலீஸ் கஸ்டடியில் நடிகை

தங்கம் கடத்திய கன்னட நடிகை ரன்யா ராவ் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. துபாயில் இருந்து ₹12 கோடி மதிப்பிலான 14.8 கி.கி தங்கம் கடத்தி வந்த போது, அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த ஆண்டு மட்டும் அவர் 27 முறை துபாய் சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
Similar News
News March 9, 2025
GST கட்டணம் குறைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

விரைவில் ஜிஎஸ்டி கட்டணம் மேலும் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேவைக்கேற்ப திருத்தங்களைச் செய்ய முயற்சிப்பதாகக் கூறிய அவர், அதனுடன் வரி அடுக்குகள் பகுத்தாய்வு செய்யப்படும் என்றார். ஜிஎஸ்டி அமலானதற்கு பிறகு விலை உயரவில்லை எனவும், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதே தங்களது இலக்கு என்றும் கூறினார்.
News March 9, 2025
தமிழகத்தில் மின் பயன்பாடு அதிகரிப்பு

கடும் வெயில், பயன்பாடு அதிகரிப்பால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம், 40.62 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுவே, இந்தாண்டில் இதுவரையிலான மின் நுகர்வில் அதிகபட்ச அளவாகும். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.2024 மே 2ல், உச்ச அளவாக மின் நுகர்வு, 45.43 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
News March 9, 2025
இன்றைய பொன்மொழிகள்!

*அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். *செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. *நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும். *மண்டியிட்டு வாழ்வதைவிட, நிமிர்ந்து சாவது மேலானது. *எதிரிகளும், தோல்வியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம். * எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிதானது – சே குவேரா.