News March 7, 2025
27 வயசுதான் வாழ்க்கையின் ஆரம்பம்: மணிகண்டன்

இன்றைய இளம் தலைமுறையினருக்கு நடிகர் மணிகண்டன் லைஃப் டைம் அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். 27 வயசு வரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவோம். நிறைய கனவு காணுவோம். ஆனா, 27க்கு அப்புறம் வாழ்க்கை ஓங்கி ஒரு அறைவிட்டு, இதுதான்டா உன் வாழ்க்கை, இதுலதான் நீ வாழனும்னு சொல்லும். அப்போ லைஃப்பை பிடிச்சுக்கிட்டா நீ தப்பிச்சிருவ, அசால்ட்டா விட்டுட்டனா, வாழ்க்கை உன்னை விட்ரும் என மணிகண்டன் அறிவுரை கூறினார்.
Similar News
News March 9, 2025
தமிழகத்தில் மின் பயன்பாடு அதிகரிப்பு

கடும் வெயில், பயன்பாடு அதிகரிப்பால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம், 40.62 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுவே, இந்தாண்டில் இதுவரையிலான மின் நுகர்வில் அதிகபட்ச அளவாகும். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.2024 மே 2ல், உச்ச அளவாக மின் நுகர்வு, 45.43 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
News March 9, 2025
இன்றைய பொன்மொழிகள்!

*அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். *செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. *நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும். *மண்டியிட்டு வாழ்வதைவிட, நிமிர்ந்து சாவது மேலானது. *எதிரிகளும், தோல்வியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம். * எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிதானது – சே குவேரா.
News March 9, 2025
சிரியாவில் பயங்கர மோதல்: 2 நாட்களில் 600 பேர் பலி!

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடர்கிறது. கடந்த 2 நாட்களில் பாதுகாப்புப் படையினருக்கும், முன்னாள் அதிபர் பஷார் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 600 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு பிரிவினரிடையே மோதல் தொடங்கியதில் இருந்து நடந்த மிக மோசமான வன்முறை இதுவாகும். தெருக்களிலும் கட்டிடங்களிலும் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. பனியாஸ் நகரத்தில்தான் இறப்பு எண்ணிக்கை அதிகம்.