News March 7, 2025
பின்வாங்கினார் டொனால்ட் டிரம்ப்

மெக்சிகோ நாட்டின் மீதான வரி விதிப்பை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் அதிபராக பொறுப்பேற்றவுடன், அண்டை நாடுகளான கனடா & மெக்சிகோ பொருட்கள் மீது 25% இறக்குமதி வரி விதித்தார். இது வர்த்தகப் போரை உருவாக்கும் நிலை ஏற்பட்டதால், சில பொருட்களுக்கு வரியை நிறுத்திவைத்து, டிரம்ப் பின் வாங்கியுள்ளார். ஆனால், கனடா மீதான வரிகள் குறைக்கப்படவில்லை.
Similar News
News March 7, 2025
தொப்பை குறையவே மாட்டேங்குதா?

பலர் உடல் எடையை குறைச்சாலும் தொப்பை குறையலனு கவலைப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அதுக்கு முக்கியமான காரணம் இருக்கு. நம்ம உடம்புல கொழுப்பு சேரத் தொடங்கும்போது எல்லா இடத்துலயும் ஒரே மாதிரியாதான் சேரும். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல, வயித்துல நிறைய இடம் இருக்கனால மேலும் மேலும் சேர்ந்துக்கிட்டே இருக்கும். அதனால, கொழுப்பு கரையும் போது, அதிக கொழுப்பு இருக்கற வயிற்றுப் பகுதியில கடைசியாத்தான் குறையும்.
News March 7, 2025
சினிமாவில் வார்னரின் சம்பளம் எவ்வளவு?

கிரிக்கெட் வீரர் வார்னர் ‘ராபின் ஹூட்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிக்க அவர் சம்பளம் எதுவும் கேட்கவில்லையாம். ஆனால், தயாரிப்பாளர் தான் அவருக்கு ₹50 லட்சம் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி குடுமலா இயக்கியுள்ள இப்படத்தில் நிதின், ஸ்ரீலீலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி இசையமைத்துள்ளார்.
News March 7, 2025
ALERT: ஃபேஸ்புக் யூஸ் பண்றீங்களா?

சர்க்கரை நோய்க்கு எலான் மஸ்க் மருந்து கண்டுபிடித்துள்ளதாக AIஆல் எடிட் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பரவி வருகின்றன. இதனால் மருந்தக நிறுவனங்கள், எலான் மஸ்க் தலைக்கு $78 மில்லியன் விலை வைத்துள்ளதாக கூறி, பயனர்களை Gluco Revive உள்ளிட்ட அதிகாரப்பூர்வமற்ற மருந்துகளை வாங்க தூண்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளது.