News March 6, 2025
3 பந்தில் 4 விக்கெட்

பாக்., வீரர்கள் தற்போது உள்நாட்டு தொடரில் விளையாடுகின்றனர். இதில் PTV அணிக்கு எதிரான போட்டியில் SBP அணியின் ஷாசாத் 3 பந்தில் 4 விக்கெட்டை எடுத்தார். அவர் வீசிய 26 ஓவரின் 3, 4வது பந்தில் PTVயின் உமர் அமீன், ஃபவாத் ஆலம் அவுட் ஆக, 5வது பந்தை எதிர்கொள்ள வந்த சவுத் ஷகீல் 3 நிமிடம் தாமதமாக வந்ததால் Timed Out விதிப்படி பந்தை சந்திக்காமலே அவுட்டானார். அதன்பின் 26.5 பந்தில் முகமது இர்பான் அவுட் ஆனார்.
Similar News
News March 7, 2025
நாளை கெடு.. மணிப்பூரில் அமைதி திரும்புமா?

மணிப்பூரில் நாளை முதல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மலைப் பகுதி மக்களுக்கு தனி நிர்வாகம் அல்லது யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என பழங்குடி அமைப்புகள் போர் கொடி தூக்கியுள்ளன. இதற்கு மெய்தி அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மலைப்பகுதியை நோக்கிய பேரணியை அறிவித்துள்ளதால், பதற்றம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
News March 7, 2025
Work From Homeல் இன்ஃபோஸிஸ் கட்டுப்பாடு

Work From Home முறையில் கட்டுப்பாடு விதிக்க, தலைமை பொறுப்பில் இருக்கும் ஊழியர்களுக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனம் மெயில் அனுப்பியுள்ளது. ஒரு மாதத்திற்கு கட்டாயம் 10 நாள்கள் அலுவலகத்தில் பணி செய்ய வேண்டும் எனவும், இந்த நடைமுறை வரும் 10ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது. வேலை நிலை 5ல் உள்ளவர்கள், அதாவது TL, சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது பொருந்தும்.
News March 7, 2025
ஜாக் மா பொன்மொழிகள்

*ஒரு தலைவருக்கு அதிக சகிப்புத்தன்மையும், தோல்வியை ஒப்புக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் திறனும் இருக்க வேண்டும். *நான் மற்றவர்களால் விரும்பப்படுபவராக இருக்க விரும்பவில்லை, நான் மற்றவர்களால் மதிக்கப்படுபவராக இருக்க விரும்புகிறேன். *இந்த உலகில் மிகவும் நம்பமுடியாத விஷயம் மனித உறவுகள். *நீங்கள் சொல்வதை இந்த உலகம் நினைவில் கொள்ளாது, ஆனால் நீங்கள் செய்ததை அது நிச்சயமாக மறக்காது.