News March 6, 2025
சாதி பெயர் நீக்கம்.. அரசுக்கு கெடு விதித்த ஐகோர்ட்

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சாதிப் பெயரை நீக்குவது குறித்து மார்ச் 14க்குள் விளக்கமளிக்க இறுதி கெடு விதித்த நீதிமன்றம், அரசு விளக்கம் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளது.
Similar News
News March 7, 2025
தீவிரவாதியை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் சிக்கல்?

மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ராணா, USA சுப்ரீம் கோர்ட்டில், அவசர மேல்முறையீடு செய்துள்ளான். தான் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால், முன்னாள் ராணுவ அதிகாரி என்ற காரணத்தால், அதீத சித்ரவதை, மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், எனவே நாடு கடத்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளான். கோர்ட் இந்த மனுவை பதிவு செய்துள்ள நிலையில், விசாரணை தேதியை இன்னும் ஒதுக்கவில்லை.
News March 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 199 ▶குறள்: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். ▶பொருள்: அரும்பயன்களை ஆராய்ந்து மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
News March 7, 2025
போலீஸ் கஸ்டடியில் நடிகை

தங்கம் கடத்திய கன்னட நடிகை ரன்யா ராவ் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. துபாயில் இருந்து ₹12 கோடி மதிப்பிலான 14.8 கி.கி தங்கம் கடத்தி வந்த போது, அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த ஆண்டு மட்டும் அவர் 27 முறை துபாய் சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.