News March 6, 2025
இந்த மாதமே கடைசி: SBI அறிவிப்பு

ஸ்டாக் மார்க்கெட், தங்கம் என பல வகை முதலீடுகள் இருந்தாலும், பெரும்பாலான முதலீட்டாளர்களின் ஃபேவரைட் FD என்று சொல்லப்படும் Fixed Depositகள்தான். அவர்களுக்கான, தங்க சுரங்கமான SBI அம்ரித் விருஷ்டி FD திட்டம், மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. 444 நாள்கள் முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்தில் 7.25% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் 7.75% வட்டி பெறலாம். SHARE IT
Similar News
News March 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 199 ▶குறள்: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். ▶பொருள்: அரும்பயன்களை ஆராய்ந்து மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
News March 7, 2025
போலீஸ் கஸ்டடியில் நடிகை

தங்கம் கடத்திய கன்னட நடிகை ரன்யா ராவ் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. துபாயில் இருந்து ₹12 கோடி மதிப்பிலான 14.8 கி.கி தங்கம் கடத்தி வந்த போது, அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த ஆண்டு மட்டும் அவர் 27 முறை துபாய் சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
News March 7, 2025
ஷமி பாவம் செய்துவிட்டார்: முஸ்லிம் மதகுரு

புனித ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடிக்காமல் ஷமி பாவம் செய்துவிட்டதாக முஸ்லிம் மதகுரு மௌலானா சஹாபுதீன் ரஷ்வி குற்றஞ்சாட்டியுள்ளார். IND vs AUS போட்டியின் போது ஷமி கூல்டிரிங் குடித்தது சர்ச்சையான நிலையில், அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், பயணத்தில் இருக்கும் போது நோன்பை கடைபிடிப்பதில் குரானில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பல முஸ்லிம் தலைவர்கள் ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.