News March 6, 2025
மர்ம நோயால் 13 பேர் மரணம்

சத்தீஸ்கரின், சுக்மா மாவட்டத்தில் பரவி வரும் மர்ம நோயால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஒரு மாதத்திற்குள் 13 பேர் மார்பு வலி மற்றும் இருமல் காரணமாக இறந்துள்ளனர். நோய் – அதன் காரணங்கள் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தினர். பருவநிலை மாற்றம் மற்றும் காட்டில் நாள் முழுவதும் உழைத்த பிறகு நீரிழப்பு ஏற்படுவதால் இறப்பு நிகழ்வதாக அவர்கள் நம்புகிறார்கள்.
Similar News
News March 7, 2025
இன்றைய (மார்ச் 7) நல்ல நேரம்

▶மார்ச்- 07 ▶மாசி – 23 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:00 AM – 10:00 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM ▶குளிகை: 07:30 AM- 09:00 AM ▶திதி: திதித்துவயம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: விசாகம் ▶நட்சத்திரம் : ரோகிணி.
News March 7, 2025
27 வயசுதான் வாழ்க்கையின் ஆரம்பம்: மணிகண்டன்

இன்றைய இளம் தலைமுறையினருக்கு நடிகர் மணிகண்டன் லைஃப் டைம் அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். 27 வயசு வரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவோம். நிறைய கனவு காணுவோம். ஆனா, 27க்கு அப்புறம் வாழ்க்கை ஓங்கி ஒரு அறைவிட்டு, இதுதான்டா உன் வாழ்க்கை, இதுலதான் நீ வாழனும்னு சொல்லும். அப்போ லைஃப்பை பிடிச்சுக்கிட்டா நீ தப்பிச்சிருவ, அசால்ட்டா விட்டுட்டனா, வாழ்க்கை உன்னை விட்ரும் என மணிகண்டன் அறிவுரை கூறினார்.
News March 7, 2025
அமெரிக்காவில் இந்தியக் குழந்தைகளுக்கு புது சிக்கல்!

அமெரிக்காவில் H1-B விசா மூலம் தங்கியிருக்கும் இந்தியர்களின் பிள்ளைகள் 21 வயதை எட்டும் வரை, அவர்களுக்கு சார்பு விசா வழங்கப்படும். 21 வயதை எட்டியதும் அவர்களும் வழக்கமான விசாவை பெற வேண்டும். அப்படி பெறாதவர்கள், 2 ஆண்டுகளுக்குள் அந்த விசாவைப் பெற அவகாசம் இருந்தது. ஆனால், சமீபத்தில் அந்த அவகாசம் ரத்து செய்யப்பட்டதால் அங்குள்ள 1.34 லட்சம் இந்தியப் பிள்ளைகள் அங்கிருந்து வெளியேறும் சூழல் எழுந்துள்ளது.