News March 6, 2025
குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் உத்தராகண்ட்: PM மோடி

குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் உத்தராகண்ட் என PM மோடி தெரிவித்துள்ளார். இளைஞர்கள் குளிர்காலத்தில் உத்தராகண்டுக்கு சுற்றுலா வரும்படி அழைப்பு விடுத்த அவர், கார்ப்பரேட் துறையினர், திரைத்துறையினர் இங்கு வந்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார். மேலும் மார்ச்-ஜூன் வரை மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் உத்தராகண்டில் சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த விஷயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
Similar News
News March 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 7, 2025
தந்தையின் ஈகோவுக்கு பலியான பிஞ்சுக் குழந்தை!

உ.பி.யைச் சேர்ந்த மோகித் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டுக்காரரான ராமு என்பவருக்கும் சமீபத்தில் சண்டை ஏற்பட்டது. ஆனால், மோகித்தின் 5 வயது மகளான தானி, எப்போதும் போல ராமுவின் வீட்டுக்கு சென்று விளையாடி வந்திருக்கிறாள். பலமுறை சொல்லியும் மகள் கேட்காததால் ஆத்திரமடைந்த மோகித், குழந்தை தானியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 4 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார். தற்போது மோகித் சிறையில் உள்ளார்.
News March 7, 2025
த்ரிஷாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

நடிகை த்ரிஷாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது குறித்த சுவாரஸ்ய தகவலை நடிகர் ராதா ரவி வெளியிட்டுள்ளார். ‘லேசா லேசா’ படத்தில் துணை நடிகைகளில் ஒருவராகத்தான் த்ரிஷா ஒப்பந்தமாகியிருந்தாராம். ஷூட்டிங்கின்போது, மும்பையில் இருந்து வர வேண்டிய நடிகை தாமதமாக வந்ததால், அங்கிருந்த த்ரிஷாவை ஹீரோயினாக்க இயக்குநர் ப்ரியதர்ஷன் முடிவு செய்தாராம். எவ்வளவு லக்கி பாருங்க!