News March 6, 2025
தென்காசி மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வரும் மார்ச் 10ஆம் தேதி தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் ஐடிஐ இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு தொழில் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. தகவலுக்கு (04633 298088, 7603942550, 9791768403)* ஷேர் பண்ணுங்க
Similar News
News September 29, 2025
தென்காசி: ஹோட்டல்களில் தரமற்ற உணவுகள்

தென்காசி மாவட்டத்தில் விதிகளை மீறிய ஹோட்டல்கள் கடைகளிலும் இருந்து 10.49 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் 99 உணவகங்கள் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகள் தரமற்ற உணவு பொருட்கள் வழங்கிய கடைகள் ஆகியவற்றிற்கு உணவுத்துறை அதிகாரிகள் மூலம் 10 புள்ளி 49 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டது.
News September 29, 2025
தென்காசி: பண்பொழி கோயிலில் அக்.01 கன்னி பெண்களுக்கு பூஜை

தென்காசி, பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை நகரீஸ்வரர் முடையார் கோயிலில் வரும் அக்டோபர் 1ம் தேதி நவராத்திரி பூஜை சரஸ்வதி பூஜை, 108 கன்னிப் பெண்களுக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம், கோவில் உதவி ஆணையர் கோமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
News September 28, 2025
தென்காசி: டெங்கு கொசு ஒழிப்பு பேரவை கூட்டம்

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் இன்று மாவட்ட பொருளாளர் வனஜா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் துவக்கவுரை ஆற்றினார். அக்டோபர் 26 அன்று மதுரையில் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தொடர்பாகவும், நவம்பர்16-அன்று சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு பேரணி குறித்து உரையாற்றினர்.