News March 6, 2025

ஆந்திராவைச் சேர்ந்த 60 வயது கொத்தடிமை மீட்கப்பட்டார்

image

சிவகங்கையில் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, ஆந்திரவைச் சேர்ந்த அப்பாராவ் தேனீர் அருந்துவதற்காக ரயிலை விட்டுக் கீழே இறங்கிய போது ரயில் சென்றது. ரயிலை தவறவிட்ட அப்பாராவுக்கு உதவ முன்வந்த ஒருவர்,அவரை 20 ஆண்டாக ஆட்டு மந்தையை மேய்ப்பவராக மாற்றிவிட்டார்.தமிழக தொழிலாளர் நலத்துறை நடத்திய கொத்தடிமைத் தொழிலாளர்களை ஒழிக்கும் நடவடிக்கையின் காரணமாக கொத்தடிமை தொழிலிலிருந்து அப்பாராவ் மீட்கப்பட்டார்.

Similar News

News April 19, 2025

சிவகங்கை: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*

News April 19, 2025

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி ஸ்தல வரலாறு

image

கார்த்திகை பெண்கள் ஆறு பேருக்கு சிவபெருமான் அஷ்டமா சித்திகளை போதிக்கும்போது, கார்த்திகை பெண்கள் திரும்பி இருந்ததால் கோபமுற்று அவர்களை பட்டமங்கலம் என்ற இந்த ஸ்தலத்தில் ஆயிரம் ஆண்டுகள் ஆல இலைகளால் மூடப்பட்டு கல்லாக இருக்கும் படி சபித்தார். பின்னர் சிவனே ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இவ்விடத்திற்கு வந்து அஷ்டமா சித்திகளை போதித்தார். எனவே இந்த ஸ்தலத்திற்கு அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி என்ற பெயர் வந்தது.

News April 19, 2025

சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த 10 சுற்றுலா தலங்கள்

image

▶️பிள்ளையார் பட்டி கோயில்
▶️வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
▶️கீழடி பாரம்பரிய அருங்காட்சியகம்
▶️செட்டியார் மாளிகை
▶️வேலுநாச்சியார் நினைவுச்சின்னம்
▶️ஆயிரல் ஜன்னல் வீடு
▶️கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்
▶️இடை காட்டூர் தேவாலயம்
▶️குந்திரன்குளி கோயில்
▶️சிவகங்கை அரண்மனை
*நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
இதில் குறிப்பிட்டவைகளை தவிர்த்து உங்களுக்கு தெரிந்த சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த இடத்தினை நீங்கள் கூறலாம்.

error: Content is protected !!