News March 6, 2025

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

image

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: BE/ B.Tech, B.Sc/M.Sc படித்திருந்தால் 1,56,500 வரை சம்பளம்

image

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேட்டா அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டேட்டா இன்ஜினியர் போன்ற பல பணிகளுக்கு BE/ B.Tech, B.Sc/M.Sc, CA டிகிரி முடித்த 22-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் 85,000-1,56,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து செப்-30குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: கத்தியை காட்டி 6 சவரன் நகை பறிப்பு

image

சோமண்டார்குடியை சேர்ந்த கல்கி (27), தனியார் கடை ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு ஸ்கூட்டரில் திரும்பியபோது, 3மர்ம நபர்கள் அவரது ஸ்கூட்டரை வழிமறித்துள்ளனர். கல்கி கீழே விழுந்ததும், மர்ம நபர்கள் அவரிடமிருந்த ஒன்றரை சவரன் தங்க சங்கிலி மற்றும் கத்தியைக் காட்டி 6சவரன் தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 14, 2025

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று 14 காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 1கிலோ மதிப்பீட்டில் தக்காளி ரூ.20 பச்சை மிளகாய் 50 கொத்தவரங்காய் ரூ.35 வெண்டைக்காய் ரூபாய் 30 புடலங்காய் ரூபாய் 40 கத்தரிக்காய் ரூபாய் 40 அவரைக்காய் ரூபாய் 50 சுரைக்காய் ரூபாய் 20 பூசணி ரூபாய் 25 பரங்கி ரூபாய் 20 உருளைக்கிழங்கு ரூபாய் 30 சேப்பங்கிழங்கு ரூபாய் 40 முருங்கைக்காய் ரூபாய் 60 என விற்பனையாகிறது.

error: Content is protected !!