News March 6, 2025

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

image

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற <>இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 18, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

குண்டுப்பெரும்பேடு ஏரியின் கல்வெட்டு திறப்பு

image

இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், டைட்டன் நிறுவனம் மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் இணைந்து புணரமைக்கப்பட்ட குண்டுப்பெரும்பேடு ஏரியின் கல்வெட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்தார். உடன் டைட்டன் நிறுவன துணைத்தலைவர் ரேவதி காந்த், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி, உதவி செயற்பொறியாளர் மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News September 18, 2025

பட்டதாரி ஆசிரியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க பெருந்திரள் ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அரசு நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!