News March 30, 2024
அதிரடியாக அரை சதம் விளாசினார் தவான்

லக்னோ அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் 30 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து வாணவேடிக்கை காட்டியுள்ளார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் வெற்றிபெற 72 பந்துகளில் 127 ரன்கள் தேவை. பேரிஸ்டோ 23* ரன்கள் எடுத்துள்ளார்.
Similar News
News August 13, 2025
மோடி ஜி.. ரோடு சரியில்ல… லெட்டர் எழுதிய சுட்டி!

பெங்களூருவின் டிராபிக்கால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து 5 வயது சிறுமி ஒருவர், PM மோடிக்கு லெட்டர் எழுதி இருக்கிறார். அதில், ‘மோடி ஜி, ஓவர் டிராபிக்கால் ஸ்கூலுக்கும் ஆபிஸுக்கும் லேட்டாக போகிறோம், ரோடு மோசமாக இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க’ என எழுதியுள்ளார். இந்த லெட்டர் வைரலாக, PM மோடி இதற்கு என்ன செய்ய போகிறார்? என நெட்டிசன்கள் வினவி வருகின்றனர்.
News August 13, 2025
நகை கடன் எந்த இடத்தில் எவ்வளவு கிடைக்கும்?

RBI வழிகாட்டுதலின்படி வங்கிகள், நிதி நிறுவனங்கள் நகை கடன் வழங்குகின்றன. ₹1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைக்கு நிதி நிறுவனங்கள் ₹75,000 வரை (75%) கடன் வழங்கும். ஆனால், அங்கு வட்டி அதிகம் (12 – 24%). பொதுத்துறை வங்கிகள் சற்று குறைவாக ₹60,000 – ₹70,000 வரை கடன் வழங்கும். ஆறுதல் என்னவென்றால் அங்கு வட்டி விகிதம் குறைவாக (7.25 – 9%) இருக்கும். தேவையை பொறுத்து தேர்வு செய்யுங்கள் நண்பர்களே! SHARE IT.
News August 13, 2025
அதிகமாக Reels பாக்குறீங்களா.. உஷார் மக்களே!

இன்ஸ்டா, யூடியூப்பில் அதிகமாக ரீல்ஸ் பார்ப்பது மது அருந்துவதை விட 5 மடங்கு ஆபத்தானது என நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது நினைவாற்றல், கவனம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கிறதாம். டோபமைன் அதிகமாக சுரப்பதால், மூளை எப்போதும் விரைவான தூண்டுதலை மட்டுமே விரும்பும் விதமாக பழகிவிடுகிறது. இதனால், எந்த விஷயத்திலும் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.