News March 6, 2025
பைக் மீது வேன் மோதி புது மாப்பிள்ளை பலி

ஆரணி அருகே இரும்பேடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த அப்பு (21) தனது நண்பர் ஆகாஷுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, எதிரே வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ஆகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். அப்புவுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதமே ஆனது. ஆரணி தாலுகா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 17, 2025
தி.மலை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

காஞ்சி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
News October 17, 2025
தி.மலை: மின்னல் தாக்கி இளைஞர் பலி!

ஆரணி அருகே சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் ஏழுமலை (22). நேற்று வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில், இடி தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 17, 2025
தி.மலை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.17) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன. தி.மலை எஸ்.கே.பி இன்ஜினியரிங் கல்லூரி, வந்தவாசி-முத்து குமரன் மண்டபம், சுமங்கலி-வி.பி.ஆர்.சி கட்டிடம், என்.எஸ். செல்வம் மஹால்-கீழ்சீத்தாமங்கலம், சுகன்யா திருமண மண்டபம்-சோ.மண்டப்பட்டி, சேத்துப்பட்டு-ராஜா முருகன் திருமண மண்டபம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!