News March 6, 2025
அமர்நாத் யாத்திரை எப்போது?

அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத்தில் 12,756 அடி உயரத்தில் உள்ள குகையில், பனியால் உருவாகும் சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான யாத்திரை வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி, 39 நாட்கள் நீடித்து ஆகஸ்ட் 9ல் நிறைவடைகிறது.
Similar News
News March 6, 2025
தமிழ்நாட்டில் வெப்பநிலை உயரும்: IMD எச்சரிக்கை

‘என்னா வெயிலு’-ன்னு மக்கள் இப்பவே புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. தமிழ்நாட்டின் பல நகரங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது தான் அதற்கு காரணம். மேலும், சூடேற்றும் செய்தியை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் 10ம் தேதி வரை இயல்பைவிட 2- 3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பவே இப்படின்னா, கோடைக்காலம் ஆரம்பிச்சா எப்படி இருக்குமோ?…
News March 6, 2025
BREAKING: நெல்லை கொலை வழக்கில் மரண தண்டனை..

2011இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, நெல்லை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த வைகுண்டம் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி செல்வராஜூக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடைய அந்தோணி ராஜ், ராஜன், லீலா, பாபு அலெக்சாண்டர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று பேருக்கு 3 மாத சிறை தண்டனையும் விதித்துள்ளது.
News March 6, 2025
இயக்குநர் பொன்குமாருக்கு திருமணம்

சினிமா இயக்குநர் பொன்குமாருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏ.ஆர். முருகதாசிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்து, பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவான 1947 ஆகஸ்ட் 16 படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் பொன்குமார். அவருக்கும், விவேகா என்பவருக்கும் தென்காசி மாவட்டம் கீழகலங்கலில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து அண்மையில் மிகவும் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது.