News March 6, 2025

வருகிற 8ஆம் தேதி ரேஷன் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்

image

மாதந்தோறும் ரேஷன் குறைதீர்ப்பு முகாம் அரசால் நடத்தப்படுகிறது. இதில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் பெறப்பட்டு தீர்வு காணப்படும். அதன்படி, மார்ச் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் வருகிற சனி (மார்ச் 8) உணவு சப்ளை, நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இதில் மக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2025

தக்காளி விலை கிலோ வெறும் ₹4

image

தமிழகத்தின் பல இடங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி வெறும் ₹6-க்கு விற்பனையாகிறது. ஆனால், அதைவிட மிக குறைவாக திண்டுக்கலில் வெறும் ₹4-க்கு விற்கப்படுகிறது. அதையும் வாங்க ஆள் இல்லாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டி விட்டு, விவசாயிகள் வேதனையுடன் செல்கின்றனர். அதிக விளைச்சல், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்துள்ளது.

News March 6, 2025

சென்னை கோட்டத்தில் 2024 இல் ரயில் மோதி 696 பேர் பலி

image

சென்னை கோட்டத்தில் மட்டும் கடந்த 2024ஆம் ஆண்டில் ரயில்கள் மோதி 696 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ”2024இல் மட்டும் ரயில்கள் மோதியும், ரயில்களில் இருந்து தவறி விழுந்தும் 1,196 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார். இதில் அதிகபட்சமாக சென்னை கடற்கரை- விழுப்புரம் தடத்தில் 500 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News March 6, 2025

பாஜக MPக்கும், தமிழக பாடகிக்கும் திருமணம்!

image

பாஜக இளைஞர் அணித் தலைவரும், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் பெங்களூருவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தேஜஸ்வியின் நெருங்கிய நண்பரான அண்ணாமலை இந்த விழாவில் பங்கேற்றுள்ளார்.

error: Content is protected !!