News March 6, 2025
UAEஇல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை

UAEஇல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் முகமது ரீனாஸ், முரளிதரன் என்பதும் தெரிய வந்துள்ளது. UAE பிரஜையை கொலை செய்த வழக்கில் ரீனாசும், இந்திய தொழிலாளியை கொலை செய்த வழக்கில் முரளிதரனுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை இந்திய தூதரகத்திடம் UAE அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News March 6, 2025
விவேகானந்தர் பாறைக்கு செல்ல 3 புதிய படகுகள் -அமைச்சர்

குமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகிறார்கள். தற்போது அங்கு 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட மூன்று புதிய படகுகள் வாங்கப்பட இருப்பதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சென்னையில் நேற்று சென்னையில் தெரிவித்தார்.
News March 6, 2025
பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் உதவி: பினராயி

பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவை எதிர்க்கும் பிராந்திய கட்சிகளிடம் காங்கிரஸ் திமிர்பிடித்த அணுகுமுறையை கடைபிடிப்பதாகவும், இது அவர்களின் ஆதிக்க மனநிலை இன்னும் மாறவில்லை என்பதையே காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் மதச்சார்பற்ற வாக்காளர்கள் எப்படி அவர்களை நம்புவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 6, 2025
தக்காளி விலை கிலோ வெறும் ₹4

தமிழகத்தின் பல இடங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி வெறும் ₹6-க்கு விற்பனையாகிறது. ஆனால், அதைவிட மிக குறைவாக திண்டுக்கலில் வெறும் ₹4-க்கு விற்கப்படுகிறது. அதையும் வாங்க ஆள் இல்லாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டி விட்டு, விவசாயிகள் வேதனையுடன் செல்கின்றனர். அதிக விளைச்சல், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்துள்ளது.