News March 6, 2025
வங்கதேச ஸ்டார் வீரர் ஓய்வு அறிவிப்பு

வங்கதேச அணியின் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்ஃபிகுர் ரஹீம், ODIயில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்த 19 ஆண்டுகால கெரியரில் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், சக வீரர்கள், குடும்பத்தினருக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். ODIல் 2006ல் அறிமுகமான இவர், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 9 சதம், 49 அரைசதங்களுடன் 7,795 ரன்களை எடுத்துள்ளார். கீப்பராக 243 கேட்ச்கள், 56 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
Similar News
News August 14, 2025
கூலி ரஜினி கிரீடத்தின் வைரம்: SK

திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிக்கு SK வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தங்களைப் பார்த்து, தங்களைப் போல மிமிக்ரி செய்து, தற்போது தங்களது துறையிலேயே தானும் இருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள் என்றும், தங்களது கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக கூலி ஜொலிக்கும் என தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: அறிவுடைமை
குறள் எண்: 427
குறள்: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். பொருள்: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள். அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
News August 14, 2025
அரசு ஊழியர்கள் திமுகவை எதிர்ப்பார்கள்: அன்புமணி

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுக அரசை எதிர்க்க வேண்டுமென்ற நிலைக்கு வந்துவிட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது வரை இல்லை என்றார். இடஒதுக்கீடு வழங்கும்படி CM ஸ்டாலினை சந்தித்து தான் முறையிட்டதாகவும், ஆனால் அதனை தர அவருக்கு மனமில்லை என்றார்.