News March 6, 2025
வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் திடீர் மரணம்

கூட்டுறவு சங்கத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (58) மற்றும் கணேசன் என்பவரும் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கு விசாரணைக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் நிலையில், நேற்று நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த ரஹ்மத்துல்லாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Similar News
News November 7, 2025
புதுக்கோட்டை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்!

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
1.உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
2.ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
3.விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
புதுகை: நெல் மூட்டைகள் அனுப்பும் பணி

திருவாரூர் மாவட்டத்திலிருந்து புதுகைக்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் வந்த 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கடையாத்துப்பட்டி மற்றும் துளையானூர் பகுதிகளில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் கிடங்கிற்கு அனுப்பபடுகிறது.
News November 7, 2025
புதுகை: திருமணத்திற்கு தங்கம் வேண்டுமா?

புதுகை மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


