News March 6, 2025
பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

தலைவாசல் தேவியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி பானுமதி இவர்களது மகள் தரணி ஸ்ரீ வயது (15 ) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று பள்ளியில் சக தோழிகள் ஐந்து பேர் கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News March 6, 2025
சேலத்தில் டிராகன் பட நடிகை!

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் டிராகன் திரைப்பட நடிகை கயாடு லோஹர் கலந்து கொண்டு பேசினார். மேலும், திரைப்பட பாடலுக்கு கல்லூரி மாணவிகளுடன் நடனம் ஆடினார். இதையடுத்து நடிகையுடன் மாணவவிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
News March 6, 2025
சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நீலகிரிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால் மேட்டுப்பாளையம்- உதகமண்டலம் இடையே சிறப்பு ரயில்கள் வரும் மார்ச் 28 முதல் ஜூலை 06 வரை வாரத்தில் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் மேட்டுப்பாளையத்தில் இருந்தும்,மறுமார்க்கத்தில், வாரத்தில் சனிக்கிழமை, திங்கள்கிழமையில் உதகமண்டலத்தில் இருந்தும் ரயில் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News March 6, 2025
‘மாநகரில் தனியார் பங்களிப்புடன் குடிநீர் திட்டம்’!

“கோடைக்காலம் தொடங்கிய நிலையில் குடிநீரைத் தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது; மேலும் ‘அம்ரூத்’ 2.0 திட்டத்தில் மாநகராட்சிக்கென ரூபாய் 750 கோடியில் தனியார் பங்களிப்புடன் குடிநீர் திட்டம் நிறைவேற்ற தற்போது ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது” என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தகவல்!