News March 6, 2025
கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (60) நேற்று முன்தினம் எறையூரில் இருந்து கல்லை கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, நன்னை கிராமம் அருகே எதிரே வந்த கார், இவரது பைக் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவரை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Similar News
News September 22, 2025
பெரம்பலூர்: எமனாக வந்த நாய்; பெண் ஒருவர் பலி!

திருச்சி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்த குர்ஷித் பேகம் (54) என்பவர், அவரது மகன் சாதிக் பாஷா (30) உடன் தொழுதூரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றபோது, பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம் அருகே சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்ததால் சாதிக் பாஷா பிரேக் பிடித்துள்ளார். இதனால் குர்ஷித் பேகம் தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News September 22, 2025
பெரம்பலூர்: கூட்டுறவு சங்கங்களில் வேலை வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் கூட்டுறவு தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.drbpblr.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துத் தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். SHARE IT NOW…
News September 22, 2025
பெரம்பலூர்: மின் மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2025) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.