News March 30, 2024

IPL: இந்த சீசனில் 100 சிக்ஸர்கள்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 100 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் – லக்னோ இடையேயான போட்டியில் LSG வீரர் பூரண் அடித்த 100ஆவது சிக்ஸராக பதிவானது. இதில் அதிகபட்சமாக ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் மட்டுமே (SRH -18, MI -20) 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. அதிகபட்சமாக SRH வீரர் க்ளாசென் மட்டுமே 15 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

Similar News

News October 30, 2025

காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் மரணம்? விளக்கம்

image

நாமக்கல் தனியார் கல்லூரி விடுதியில் கடந்த திங்கள்கிழமை காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சில மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை மறுத்துள்ள தமிழக அரசின் Fact Check, மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ளனர். எனவே, உயிரிழந்ததாக பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என கூறியுள்ளது.

News October 30, 2025

NDA கூட்டணி CM வேட்பாளர் யார்? அமித்ஷா பதில்

image

பிஹார் தேர்தலில் NDA வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். CM வேட்பாளரை தேர்வு செய்ய கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளதாக கூறிய அவர், தேர்தலுக்கு பின் அவர்களுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என கூறினார். ஆனால், தற்போதைக்கு நிதிஷ்குமார் தலைமையில்தான் தேர்தலை சந்திக்கிறோம் என்றார். இதனால், பிஹாரின் நீண்டகால CM நிதிஷ்குமார் மீண்டும் CM-ஆக தேர்வாகமாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News October 30, 2025

இந்தியாவை உலுக்கிய டாப் ஊழல்கள்!

image

உலகின் மிகபெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஊழல் விவகாரங்களுக்கும் பஞ்சமில்லை. அப்படி இந்தியாவை உலுக்கிய டாப் 5 ஊழல் சம்பவங்களை பட்டியலிட்டுள்ளோம். அவை என்னென்ன என்பதை அறிந்து கொள்ள மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இந்த பட்டியலில் இன்னும் என்னென்ன ஊழல்களை சேர்க்கலாம்.. நீங்க கமெண்ட் பண்ணுங்க?

error: Content is protected !!