News March 6, 2025
தினமும் பீர் குடிப்பவரா நீங்கள்?

மது அளவாக தான் குடிப்பேன் என சொல்பவர்களுக்கு கூட உடலில் சிறு பிரச்சனைகள் வரும். சிலர் பீர் அடித்தால் எந்த பிரச்னையும் வராது என கூறுவதை கேட்க முடியும். ஆனால் தினமும் 2 பீர் குடித்ததால் மூளை 10 ஆண்டுகள் முதிர்ச்சியடையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் துரித உணவுகளும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. ஒருநாளைக்கு எத்தனை பீர் நீங்க அடிக்குறீங்க?
Similar News
News March 6, 2025
ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் ED சோதனை

சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் என்ற நிறுவனத்திலும் சோதனை நடந்து வருகிறது. SNJ என்ற மதுபான நிறுவனம், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் காலை முதல் ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் 3 நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.
News March 6, 2025
திருப்பதியில் இனி மசால் வடை

திருப்பதி என்றாலே லட்டுதான். ஆனால், இனி மசால் வடையும் கிடைக்குமாம். அட ஆமாங்க, தினசரி நடக்கும் அன்னதானத்தில் தான் மசால் வடை பரிமாறப்படுகிறது. சோதனை முயற்சியாக இந்தத் திட்டத்தை தேவஸ்தான அறங்காவலர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் சாப்பிட அமர்ந்திருந்த பக்தர்களின் இலைகளில் மசால் வடையும் பரிமாறப்பட, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கம் எழுப்பி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
News March 6, 2025
குழந்தை பிறப்பு விகிதம் (TFR) என்றால் என்ன?

பெண்கள் தங்கள் வாழ்நாளில் பெறும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையே பிறப்பு விகிதம் (Fertility Rate -TFR) ஆகும். ஒரு நாட்டின் மக்கள்தொகை நிலையாக இருக்க, அந்நாட்டில் TFR, 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவின் TFR தற்போது 2.01 தான். உபி, பிஹார் போன்ற வடமாநிலங்களில் இதைவிட அதிகம். ஆனால், குடும்ப கட்டுப்பாட்டை சிறப்பாக செய்த தமிழ்நாட்டிலோ TFR விகிதம் 1.52 ஆகவுள்ளது. இதுவே தற்போது பாதகமாகிவிட்டது.