News March 5, 2025
தமிழகத்தை பின்பற்றும் பிஹார்

தமிழக நலத்திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பி அடிப்பது வழக்கமாகிவிட்டது. பிஹார் அரசின் பட்ஜெட்டில் பெண்களுக்கான பிங்க் பேருந்து, வேலை செய்யும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், அரசுப் போக்குவரத்து கழக வேலைகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு என பெண்களை மையப்படுத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகையும் ரூ.1000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2025
₹1,200 முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம்

மாநிலத்தில் முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாதந்தோறும் 10ம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை ₹1,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது மாதக் கடைசி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கு பலமுறை அலைந்து பணம் பெற வேண்டியிருப்பதால், 10ம் தேதிக்குள் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 6, 2025
இந்தியாவுக்கு சாதகம்… நியூசிலாந்துக்கு பின்னடைவு…

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் நியூசிலாந்தின் மேட் ஹென்றி. நேற்றைய அரையிறுதி ஆட்டத்திலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் கேட்ச் ஒன்றை பிடிக்க முயன்ற போது காயம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் ஹென்றி பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
. அவர் விளையாடவில்லை என்றால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.
News March 6, 2025
தவெகவினருக்கு பறந்த அறிவுரை? – விஜய் அதிரடி!

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி களமாடும் விஜய், மக்களை சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது. இந்நிலையில், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கு தயாரான அவர், தவெக நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியதாகக் கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக மக்கள் பிரச்னைகளை அறிந்து, போராட்டங்களை முன்னெடுக்குமாறு விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.