News March 5, 2025

பாலம் வேலையால் பஸ் வசதியின்றி மாணவர்கள் அவதி

image

ஆனைக்குளத்தில் பாலம் பணிகள் நடைபெறுவதால் மாற்றுப்பாதை இல்லாமல் வைத்திலிங்கபுரம், தங்கையம், வில்வனம்புதூர் ஆகிய 3 ஊர்களுக்கு முற்றிலுமாக பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வள்ளியூரில் இருந்து ஆனைகுளம் வரைக்கும் பஸ் இயக்கப்படுகிறது. அரசு பொது தேர்வு நடைபெறுவதால் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து வில்வனம்புதூர் வரைக்கும் பஸ் இயக்க கோரிக்கை

Similar News

News August 24, 2025

நெல்லை மாவட்டத்தில் 3 மாதத்தில் 3 கொலைகள் தடுப்பு

image

நெல்லை மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் எல்லைகளில், சதித்திட்டத்துடன் திட்டமிடப்பட்ட இரண்டு கொலைகளை ஜூன் மாதம் காவல்துறை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்தது. இதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் 19 போலீசாருக்கு விருது வழங்கினார். நேற்று களக்காடு அருகே 5 பேரை கைது செய்ததால் மற்றொரு கொலை தடுக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் நெல்லையில் 3 கொலை முயற்சிகள் தடுக்கப்பட்டன.

News August 24, 2025

நெல்லையில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

image

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0462-2572689 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.

News August 24, 2025

நெல்லை: நம்ம ஊரு கலெக்டரை அழைக்கலாம்!

image

நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 97865 66111 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462-2501222. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!