News March 5, 2025

ஆய்வு நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இன்று தமிழ்நாடு பொது நிறுவனங்கள் குழு தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சக குழு உறுப்பினர்களுடன் ஆய்வு நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் மாஸ்தான், மாவட்ட ஆட்சியர், விக்கிரவண்டி எம்எல்ஏ, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.

Similar News

News September 23, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 23 அன்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. தவெக, காங்கிரஸ், திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News September 23, 2025

தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர் கூட்டம்

image

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!