News March 5, 2025

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.இப்பயிற்சி மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒரு முறை மட்டும் ரூ.6,000 வழங்கப்படும். எனவே, தகுதியுள்ளவர்கள் <>http://pminternship.mca.gov.in/login/ <<>>என்ற இணையதளம் மூலம் வரும் மார்ச் 12- க்குள் விண்ணப்பிக்கலாம் . இதை ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 6, 2025

பள்ளிகள் அருகில் புகையிலை -136 கடைகளுக்கு சீல்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 136 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகளில் இருந்து ரூபாய் 2.30 லட்சம் மதிப்பிலான 251 புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு ரூபாய் 42.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 6, 2025

சேலம் மார்ச்.6 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மார்ச் 6 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9:30 மணி செவ்வாய்பேட்டையில் பாஜக கையெழுத்து இயக்கம் ஆரம்பம். ▶️காலை 10 மணி அரசு மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா ▶️காலை 10 மணி விஸ்வ இந்து பரிசத் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் ▶️காலை 11 மணி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️காலை 11 மணி பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் சந்திப்பு கூட்டம்.

News March 6, 2025

சேலத்தில் வேலைவாய்ப்பு – ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் 08.03.2025 அன்று ஆத்தூர் தேவியாகுறிச்சி தாகூர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. மேலும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!