News March 5, 2025
Way2News எதிரொலி: சேதமடைந்த மின்கம்பம் மாற்றம்

தஞ்சை மாவட்டம், வெண்டயம்பட்டியில் முறிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பம் குறித்து பல புகார் மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தினை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தினை அங்கு மின்வாரியத்தினர் நிறுவியுள்ளனர். இதுபோல உங்கள் பகுதி மக்கள் கோரிக்கைகளும் நிறைவேற Way2News-இல் நிருபராக இணையவும்!
Similar News
News April 30, 2025
செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர் கோவில்

தஞ்சை, விளங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் சாமிக்கு விளக்கு ஏற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு அட்சய திரிதியை நாளில் வேண்டினால் செல்வம் செழிக்கும், நீண்ட ஆயுள் பெருகும், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கையாகும். அட்சய திரிதியை நாளில் உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் SHARE பண்ணுங்க
News April 30, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

பட்டுக்கோட்டை பகுதியை சேந்தவர் வினோத் (25). வெல்டிங் தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த 13 வயதுச் சிறுமியிடம், காதலிப்பதாகக் கூறி வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை கடைவீதிக்கு வந்த சிறுமியை கட்டிப்பிடித்து, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News April 29, 2025
தஞ்சை மாவட்டத்தில் மதுக்கடைகள் இயங்காது

மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் செயல்படாது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள மதுபான கடைகள், அதையொட்டி பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி கடைகள் மூடி வைக்க உத்தரவிட்டுள்ளார்.