News March 30, 2024
அதிமுக 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும்

மக்களவைத் தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்திப்பதுடன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும் என பாஜக நிர்வாகி ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது, ஒருவேளை அதிமுக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தொடர்வாரா என்பது சந்தேகம் தான் எனக் கூறிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒன்றரை கோடி வாக்குகளை அதிமுக வாங்கியதா எனவும் கேள்வி எழுப்பினார்.
Similar News
News February 11, 2026
தங்கப் பத்திர முதலீடு.. 3 மடங்கு லாபம்!

இன்று முதிர்ச்சியடையும் 2019-20 தங்கப் பத்திரங்களின் விலை கிராமுக்கு ₹15,440 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ₹4,070-க்கு வாங்கியவர்களுக்கு, இப்போது 3.8 மடங்கு லாபம் கிடைக்கும். ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு தற்போது தோராயமாக ₹3.8 லட்சமாக உயர்ந்திருக்கும். கூடுதலாக, ஆண்டுதோறும் 2.5% வட்டியும் கிடைக்கிறது. தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியதே இந்த லாபத்துக்கு முக்கிய காரணமாகும்.
News February 11, 2026
நாளை ஸ்டிரைக்.. பள்ளிகளுக்கு விடுமுறையா?

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. வேலை நிறுத்தத்திற்கு திமுகவின் தொழிற்சங்கம் (தொமுச) ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News February 11, 2026
தாய்மையை போற்றும் நடிகை பூர்ணா

பரத்துடன் ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், 2022ல் துபாய் தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு ஏற்கெனவே 3 வயதில் மகன் உள்ள நிலையில், தனது 2-வது குழந்தைக்கான வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அழகு மிளிரும் அந்த புகைப்படங்கள் SM-ல் தற்போது டிரெண்டாகி வருகின்றன.


