News March 5, 2025
11ம் வகுப்பு தேர்வு 36,000 பேர் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும் +1 பொதுத்தேர்வு இன்று துவங்கி வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் +1 பொது தேர்வை மொத்தம் 127 மையங்களில் 363 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 36,664 மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வின் போது முறைகேடுகளை தடுக்கும் வகையில் 300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. தேர்வு மையங்களில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
Similar News
News August 4, 2025
ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம்!

கோவையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று தெரிவித்துள்ளார். மாநகர் பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, மதன் கண்ணன், அறிவழகன், கோபிநாத், அருண் குமார், சுஜி மோகன் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
News August 4, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (04.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 4, 2025
கோவை: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க இங்கு <