News March 5, 2025
முதல்வர் மருந்தகம்: அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்

பொதுமக்கள் நலன் கருதி தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 3 இடங்களில் இந்த மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து மருந்துகளும் 25% தள்ளுபடியில் கிடைப்பதுடன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான மாத்திரைகள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் கீதா ஜீவன் வேண்டியுள்ளார்.
Similar News
News March 6, 2025
கடைசி நேரத்தில் ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு!

குமரி – பாலக்காடு, எர்ணாகுளம் ரயிலில் உள்ளிட்ட தென்னக ரயில்வேயின் 35 முக்கிய விரைவு ரயில்களில் டி ரிசர்வ் டிக்கெட் வசதி உள்ளது. இதன் மூலம் காலியாக செல்லும் படுக்கை பெட்டியில் பயணிக்க வசதி கிடைக்கிறது. இந்த வசதியை விரைவில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளதாக தென்னக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. எல்லோரும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க
News March 6, 2025
தூத்துக்குடி: 3 துணை தாசில்தார்கள் தாசில்தார்களாக பதவி உயர்வு

தூத்துக்குடியில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய ரமேஷ் இஸ்ரோ நிலம் எடுப்பு பிரிவு தாசில்தாராகவும், திருச்செந்தூர் மண்டல துணை தாசில்தார் சிவகுமார் திருச்செந்தூர் ஆதிதிராவிட நல தாசில்தாராகவும், ஸ்ரீவை., தாலுகா மண்டல துணை தாசில்தார் பாண்டியராஜன் தூத்துக்குடி அறநிலையத்துறை அலுவலக தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவுகளை நேற்று(மார்ச் 6) கலெக்டர் இளம் பகவத் வெளியிட்டுள்ளார்.
News March 6, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.