News March 30, 2024
அரை சதம் கடந்தார் டி காக்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நிதானமாக ஆடிவரும் லக்னோ வீரர் டி காக் அரை சதம் கடந்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் தற்போது வரை 54* ரன்கள் அடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இது இவருக்கு முதலாவது அரை சதமாகும். மறுபுறம் அதிரடியாக ஆடிவரும் பூரண் 25* ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது வரை LGS அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News March 24, 2026
சி.வி.சண்முகத்துக்கு எதிராக அதிமுகவில் போர்கொடி!

விழுப்புரத்தில் சி.வி. சண்முகத்துக்கு எதிராக அதிமுக தெற்கு விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி போர்க்கொடி தூக்கியுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் தனியாக தீவிர ஆலோசனை செய்து வருகிறார். கட்சியின் வளர்ச்சிக்கு அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் தொடர்ந்து தடையாகவும், மாவட்டத்தை பிரிக்க விடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கும் அவர், சி.வி.சண்முகம் குறித்து தலைமையிடம் புகார் தெரிவிக்க உள்ளார்.
News March 24, 2026
திமுக முடிவில் CPM-க்கு திருப்தி இல்லை: பெ.சண்முகம்

திமுக ஒதுக்கிய தொகுதி எண்ணிக்கையில்(5) CMP-க்கு திருப்தி இல்லை என பெ.சண்முகம் வெளிப்படையாக பேசியிருக்கிறார். எந்த விதத்திலும் NDA கூட்டணிக்கு உதவியாக இருக்கக்கூடாது என்ற அக்கறையோடு இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக கூறிய அவர், கூட்டணி ஒற்றுமைக்காக மட்டுமே தொடர்கிறோம் எனவும் கூறியுள்ளார். மேலும், கடந்த முறை வென்ற 2 தொகுதிகள் & சென்னையில் 1 தொகுதி என விருப்ப பட்டியலை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
ALERT: 194 தரமற்ற மருந்துகள்.. ஆய்வில் அதிர்ச்சி!

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 194 தரமற்ற, 4 போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலனவை High BP, சளி, காய்ச்சல் பிரச்னைகளுக்கு பயன்படுத்துபவை. இந்த மருந்துகளின் பட்டியல் <


