News March 5, 2025
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். <
Similar News
News September 17, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
விழுப்புரம்: மாவட்ட ஜூனியர் தடகளப் போட்டி துவக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில், 49-வது ஜூனியர் தடகளப் போட்டி, இன்று (செப்.16) துவங்கியது. விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட 1,500 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட தடகள சங்கத் தலைவர் பொன்னுசாமி கார்த்திக், போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன
News September 16, 2025
விழுப்புரம்: 16 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 16 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிய விஜய், கெடார் காவல் நிலையத்திற்கும், கெடார் காவல் நிலையத்தில் பணியாற்றிய விஜயகுமார், மயிலம் காவல் நிலையத்திற்கும், ஆரோவில் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆனந்தன், செஞ்சி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்