News March 5, 2025
மருத்துவமனை கட்டுவதாக மோசடி

அருப்புக்கோட்டையை சேர்ந்த பானுமதி என்பவரிடம் மதுரை சிந்தாமணியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி வருவதாகவும், இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 36% முதல் வட்டி தருவதாகவும், இவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசம் என கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் மேலும் சிலர் பணம் செலுத்தியுள்ளதால் அதில் பணம் கிடைக்காதவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.
Similar News
News December 28, 2025
விருதுநகர்: குடிநீர் வேன் மோதி பூஜாரி பலி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி இருஞ்சிறையை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் 77. பூஜாரியான இவர் அங்குள்ள சிவன் கோயிலில் பூஜை முடித்துவிட்டு ரோட்டோரம் நடந்து சென்றார்.அப்போது குடிநீர் சப்ளை செய்ய வந்த மினி வேன் பின்னோக்கி வந்த போது பூஜாரி மீது மோதி பலியானார். கட்டனூர் போலீசார் டிரைவர் கார்த்திகைசாமியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
News December 28, 2025
விருதுநகர் மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க

விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News December 28, 2025
விருதுநகர்: குடிக்க பணம் தராததால் மகன் தற்கொலை

வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் முருகானந்தம் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இன்று முருகானந்தம் அம்மா சுந்தரம்மாளிடம் குடிக்க பணம் கேட்டு தராததால் வீட்டின் மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


