News March 5, 2025
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்

2026 பேரவைத் தேர்தலுக்காகத் தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் கெளஷிக் பாண்டியன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் களமிறங்குவார் என அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், முதல் கட்சியாக வேட்பாளரை அறிவித்து தமிழக அரசியல் களத்தை நாதக சூடுபிடிக்க வைத்துள்ளது.
Similar News
News March 6, 2025
வங்கதேச ஸ்டார் வீரர் ஓய்வு அறிவிப்பு

வங்கதேச அணியின் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்ஃபிகுர் ரஹீம், ODIயில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்த 19 ஆண்டுகால கெரியரில் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், சக வீரர்கள், குடும்பத்தினருக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். ODIல் 2006ல் அறிமுகமான இவர், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 9 சதம், 49 அரைசதங்களுடன் 7,795 ரன்களை எடுத்துள்ளார். கீப்பராக 243 கேட்ச்கள், 56 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
News March 6, 2025
நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை: PK

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் போட்டியிட்டாலும் அவரால் மீண்டும் முதல்வராக முடியாது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாரின் செல்வாக்கு குறைந்து வருவதால், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயக்கம் காட்டும் என்றும், இதை தன்னால் எழுதிக்கூட தர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதியில் அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
News March 6, 2025
வேளாண் பட்ஜெட்: உங்கள் கருத்தை அரசுக்கு பகிரலாம்!

வரும் 2025 -26ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட், 15ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, மக்கள் தங்கள் கருத்துகளை tnagribudget2025@gmail.com என்ற இ-மெயில் வழியாக தெரிவிக்கலாம். ஏற்கெனவே, கடந்த வாரம் வேளாண்துறை சார்ந்த கருத்துகேட்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.