News March 5, 2025
CM ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் கவுரவம் பார்க்காமல் வாருங்கள் என 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தை பாஜக, நாதக, தமாக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
Similar News
News March 6, 2025
15 ஆண்டுகளுக்கு பின் பழைய முறையில் மரண தண்டனை

அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுட்டுக் கொல்லும் (Firing Squad) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 2001ல் முன்னாள் காதலியின் பெற்றோரை கொலை செய்ததற்காக, பிராட் சிக்மோன் (67) என்பவருக்கு நாளை இத்தண்டனை வழங்கப்பட உள்ளது. 1608ல் அறிமுகமான இந்த தண்டனை முறை, கடைசியாக 2010ல் செயல்படுத்தப்பட்டது. 1980களுக்குப் பிறகு பெரும்பாலும் இதற்கு பதிலாக விஷ ஊசி செலுத்தும் முறையே பின்பற்றப்பட்டது.
News March 6, 2025
வங்கதேச ஸ்டார் வீரர் ஓய்வு அறிவிப்பு

வங்கதேச அணியின் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்ஃபிகுர் ரஹீம், ODIயில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்த 19 ஆண்டுகால கெரியரில் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், சக வீரர்கள், குடும்பத்தினருக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். ODIல் 2006ல் அறிமுகமான இவர், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 9 சதம், 49 அரைசதங்களுடன் 7,795 ரன்களை எடுத்துள்ளார். கீப்பராக 243 கேட்ச்கள், 56 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
News March 6, 2025
நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை: PK

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் போட்டியிட்டாலும் அவரால் மீண்டும் முதல்வராக முடியாது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாரின் செல்வாக்கு குறைந்து வருவதால், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயக்கம் காட்டும் என்றும், இதை தன்னால் எழுதிக்கூட தர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதியில் அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.