News March 5, 2025
தேர்வுக்கு பயந்து 2,000 கி.மீ பயணித்த சிறுவன்

பிளஸ் 1 படிக்கும் சிறுவன் ஒருவன், தேர்வுக்கு பயந்து, 2,000 கி.மீ பயணித்த திடுக் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. கடந்த பிப்.21ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு ரயிலில் சென்றுள்ளான். பின்னர், அங்கிருந்து கிருஷ்ணகிரி வந்து, அங்கு, கட்டுமான வேலை செய்துள்ளான். இதை அறிந்த போலீசார் அவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பயப்படலாம் அதுக்குனு இப்படியா.
Similar News
News March 6, 2025
ராசி பலன்கள் (06 – 03 – 2025)

➤மேஷம் – நலம் ➤ரிஷபம் – லாபம் ➤மிதுனம் – சாந்தம் ➤கடகம் – போட்டி ➤ சிம்மம் – நட்பு ➤கன்னி – ஆதரவு ➤துலாம் – சலனம் ➤விருச்சிகம் – உதவி ➤தனுசு – தேர்ச்சி ➤மகரம் – கவனம் ➤கும்பம் – புகழ் ➤மீனம் – நன்மை.
News March 6, 2025
என்னை மிரட்டி செய்ய வைத்தனர்: நடிகை ரன்யா ராவ்

தங்கக் கடத்தலில் ஈடுபட்டு கைதான நடிகை ரன்யா ராவிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தன்னை சிலர் மிரட்டி தங்கக் கடத்தலில் ஈடுபடச் செய்ததாக ரன்யா ராவ் கூறியுள்ளார். முன்னதாக, துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தபோது பெங்களுரில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், நடப்பாண்டில் மட்டும் 10 முறை அவர் துபாய் சென்று வந்தது தெரியவந்துள்ளது.
News March 5, 2025
BREAKING: நியூசி., அபார வெற்றி

ICC Champions Trophy தொடரின் 2nd Semi-Finalலில் தெ.ஆப்., அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நியூசி., அணி முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த NZ 362 ரன்கள் எடுத்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய SA 50 ஓவரில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால், இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசி., அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறப்போவது யார்?