News March 5, 2025
டிரம்புக்கே டஃப் கொடுக்கும் ட்ரூடோ!

$30 பில்லியன் மதிப்பிலான USA இறக்குமதி பொருள்களுக்கு, கனடா பிரதமர் ட்ரூடோ 25% வரி விதித்துள்ளார். கனடாவின் இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் எனவும், டிரம்பின் நியாயமற்ற செயல் தொடர்ந்தால், கூடுதலாக 125 பில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக, கனடா, மெக்ஸிகோ இறக்குமதிகளுக்கு டிரம்ப் 25% வரி விதித்திருந்தார்.
Similar News
News March 5, 2025
ஐக்கி பெர்ரியின் ஜப்பான் குளியல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஐக்கி பெர்ரி. இவரது இன்ஸ்டா போட்டோஸ் தான் இப்போது வைரல். ஜப்பான் சென்றுள்ள அவர், அங்கு பிரபலமான onsen ஹாட் ஸ்ப்ரிங்கில் நிர்வாண குளியல் போட்டுள்ளார். முதன் முதலாக ஆடையின்றி பொதுவெளியில் குளிக்க வெட்கமாக இருந்ததாகவும், ஆனாலும், அங்கு பெண்கள் மட்டுமே இருந்ததால் பின் இயல்பாகிவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர், When in Japan, do as the Japanese do! என்கிறார்.
News March 5, 2025
தாய்நாட்டுக்கு பெயர் வைத்தவர் காலமானார்

குழந்தைக்கு பெயர் வைக்கும் பாக்கியம் கூட பலருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியிருக்க, தன் தாய்நாட்டுக்கே பெயர் வைக்கும் வாய்ப்பு கிடைத்தால்… ஆம், 1960களில் ஆப்பிரிக்காவின் தாங்கனிகா, ஸான்சிபார் இணைந்து ஒரே நாடான போது, அதற்கு பெயர் வைக்க போட்டி நடத்தப்பட்டது. அப்போது இளைஞரான முகமது இக்பார் தார் வைத்த ‘தான்சானியா’ என்ற பெயர் ஏற்கப்பட்டது. அந்த பெருமைக்குரியவர் தன் 80-வது வயதில் பிரிட்டனில் காலமானார்.
News March 5, 2025
அவுரங்கசீப்பை புகழ்ந்த எம்எல்ஏவுக்கு ‘ட்ரீட்’

அவுரங்கசீப்பை புகழ்ந்த மகாராஷ்ட்ரா சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மியை யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். சத்ரபதி சிவாஜியை நினைத்து வெட்கப்படுவதாகவும், அவுரங்கசீப்பை தனது ரோல் மாடலாக நினைப்பதாகவும் கூறும் அந்த எம்எல்ஏ இனியும் நம் நாட்டில் இருக்கலாமா? அந்த எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, உ.பி.க்கு அனுப்புங்கள். அவருக்கு நாங்கள் ட்ரீட் கொடுக்கிறோம் என யோகி ஆதித்யநாத் கூறினார்.