News March 5, 2025
படகோட்டிகள் கூட ₹30 கோடி வருமானம் ஈட்டினர்: யோகி

கும்பமேளாவில் ₹7,500 கோடி முதலீடு செய்து, ₹3 லட்சம் கோடியை அரசு வருமானமாக ஈட்டியதாக உ.பி. முதல்வர் யோகி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். படகோட்டிகள் கூட ₹30 கோடி வருமானம் ஈட்டியதாகவும், நாளொன்றுக்கு அவர்கள் ₹50,000- ₹52,000 வரை வருமானம் ஈட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆள்கடத்தல், பாலியல் தொல்லை, திருட்டு, கொலை என ஏதாவது ஒரு குற்றத்தை காட்ட முடியுமா எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
Similar News
News March 5, 2025
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: சீமான்

எஸ்.டி.பி.ஐ தலைவர் ஃபைசி கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் விமர்சித்துள்ளார். தன்னாட்சி அமைப்புக்களைத் தனது கைப்பாவையாக்கி, மத்திய அரசு அரசியல் எதிரிகளை தொடர்ந்து பழி வாங்குவதாகவும், இது நாட்டை பேரழிவை நோக்கிக் கொண்டு செல்லும் எனவும் அவர் சாடியுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஃபைசியை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.
News March 5, 2025
காய்கறிகள் விலை கடும் சரிவு.. விவசாயிகள் கவலை!

காய்கறிகள் விலை கடந்த ஒரு வாரத்தில் தலைகீழாக மாறியுள்ளது. சென்னையில் இன்று(மார்ச் 5) ஒரு கிலோ தக்காளி- ₹12, பீட்ரூட்-₹10, கத்திரிக்காய்- ₹10, கேரட்- ₹15 – ₹30, முருங்கைக்காய்- ₹40, சின்ன வெங்காயம்- ₹18 – ₹25க்கு விற்பனையாகிறது. மேட்டுப்பாளையம் மொத்த சந்தையிலேயே ஒரு கிலோ பூண்டு ₹60 – ₹100ஆக குறைந்துள்ளது. இந்த விலை குறைவு பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.
News March 5, 2025
SA vs NZ இன்று பலப்பரீட்சை.. யார் அடுத்த ஃபைனலிஸ்ட்

சாம்பியன்ஸ் டிராபி 2வது அரையிறுதியில் நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. லாகூரின் கடாபி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. பந்துவீச்சு, பேட்டிங் என இரு அணிகளுமே சமமான பலத்துடன் இருப்பதால், போட்டியில் அனல் பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த மேட்சில் யார் வெற்றி பெறுவார்கள்?