News March 5, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (மார்ச். 04) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News August 13, 2025

புனித ஜார்ஜ் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு

image

79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில் புனித ஜார்ஜ் கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 5அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News August 13, 2025

சென்னையில் மூக்கை கடித்து குதறிய நாய்

image

பூவிருந்தவல்லி அருகே கட்டுமான பணி நடக்கும் இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த ராட்வீலர் நாய் கடித்து ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அந்நாய் கடித்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவரின் மூக்கு துண்டானது. மேலும், மேல் சிகிச்சை்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து சென்னையில் நாய் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News August 13, 2025

JUST IN: தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு

image

தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தூய்மைப் பணியாளர்களை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கலைந்து செல்ல காவல்துறை அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களை தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய கூடாது என தமிழிசை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!