News March 5, 2025
ராசி பலன்கள் (5-03-2025)

➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – நட்பு ➤மிதுனம் – வெற்றி ➤கடகம் – பயம் ➤ சிம்மம் – பகை ➤கன்னி – அமைதி ➤துலாம் – தெளிவு ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – உறுதி ➤மகரம் – பெருமை ➤கும்பம் – சாந்தம் ➤மீனம் – ஓய்வு.
Similar News
News March 5, 2025
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்

2026 பேரவைத் தேர்தலுக்காகத் தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் கெளஷிக் பாண்டியன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் களமிறங்குவார் என அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், முதல் கட்சியாக வேட்பாளரை அறிவித்து தமிழக அரசியல் களத்தை நாதக சூடுபிடிக்க வைத்துள்ளது.
News March 5, 2025
பிளஸ் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள், பெற்றோர் தங்கள் புகார்கள், சந்தேகங்களை அறிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். 9498383075, 9498383075 ஆகிய எண்களில் அழைக்கலாம். ALL THE BEST.
News March 5, 2025
CM ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் கவுரவம் பார்க்காமல் வாருங்கள் என 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தை பாஜக, நாதக, தமாக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.