News March 4, 2025

நடிகையுடன் கலக்கும் குட்டி டிராகன்

image

VJ Siddhu Vlogs மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஹர்ஷத் கான், டிராகன் படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.
டிராகன் படத்தில் குட்டி டிராகன் கதாபாத்திரத்தில் வந்த ஹர்ஷத் கான் பலரின் கவனத்தை ஈர்த்தார். தற்போது டிராகன் பட நடிகர் கயாடு லோஹருடன் அவர் இருக்கு ஸ்டைலிஷான புகைப்படங்களை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார்.

Similar News

News March 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 197 ▶குறள்: நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. ▶பொருள்: பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

News March 5, 2025

டிரம்புக்கே டஃப் கொடுக்கும் ட்ரூடோ!

image

$30 பில்லியன் மதிப்பிலான USA இறக்குமதி பொருள்களுக்கு, கனடா பிரதமர் ட்ரூடோ 25% வரி விதித்துள்ளார். கனடாவின் இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் எனவும், டிரம்பின் நியாயமற்ற செயல் தொடர்ந்தால், கூடுதலாக 125 பில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக, கனடா, மெக்ஸிகோ இறக்குமதிகளுக்கு டிரம்ப் 25% வரி விதித்திருந்தார்.

News March 5, 2025

படகோட்டிகள் கூட ₹30 கோடி வருமானம் ஈட்டினர்: யோகி

image

கும்பமேளாவில் ₹7,500 கோடி முதலீடு செய்து, ₹3 லட்சம் கோடியை அரசு வருமானமாக ஈட்டியதாக உ.பி. முதல்வர் யோகி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். படகோட்டிகள் கூட ₹30 கோடி வருமானம் ஈட்டியதாகவும், நாளொன்றுக்கு அவர்கள் ₹50,000- ₹52,000 வரை வருமானம் ஈட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆள்கடத்தல், பாலியல் தொல்லை, திருட்டு, கொலை என ஏதாவது ஒரு குற்றத்தை காட்ட முடியுமா எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

error: Content is protected !!