News March 4, 2025
காதலரை பிரிகிறாரா நடிகை தமன்னா?

நடிகை தமன்னா – பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து நட்சத்திர தம்பதியாக வலம் வருவார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், காதலருடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட படங்களை தமன்னா நீக்கியுள்ளார். இதேபோல், விஜய் வர்மாவும் தமன்னா உடனான படங்களை நீக்கியுள்ளார். இதனால், இருவரும் பிரிந்து விட்டார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News March 5, 2025
இரண்டே இந்தியர்கள் படைத்த சாதனை.. அதிலும் கோலி!

ODI சேஸிங்கில் 8,000 ரன்களை கடந்த 2ஆவது வீரராக கோலி உருவெடுத்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கோலி இணைந்துள்ளார். 242 சேஸிங் போட்டிகளில், சச்சின் 8720 ரன்களை எடுத்திருக்கிறார். ஆனால், கோலியோ வெறும் 170 போட்டிகளிலேயே 8,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். AUSக்கு எதிரான நேற்றைய போட்டியில், 84 ரன்களை அடித்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
News March 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 197 ▶குறள்: நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. ▶பொருள்: பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
News March 5, 2025
டிரம்புக்கே டஃப் கொடுக்கும் ட்ரூடோ!

$30 பில்லியன் மதிப்பிலான USA இறக்குமதி பொருள்களுக்கு, கனடா பிரதமர் ட்ரூடோ 25% வரி விதித்துள்ளார். கனடாவின் இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் எனவும், டிரம்பின் நியாயமற்ற செயல் தொடர்ந்தால், கூடுதலாக 125 பில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக, கனடா, மெக்ஸிகோ இறக்குமதிகளுக்கு டிரம்ப் 25% வரி விதித்திருந்தார்.